சுடச்சுட

  

  நியாயவிலைக் கடைகளில் மளிகைப் பொருள்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது: தனி வட்டாட்சியர் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 13th September 2019 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீர்காழி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் புதன்கிழமை ஆய்வு செய்த குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் விஜயராகவன், பொதுமக்களை கட்டாயப்படுத்தி மளிகை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களை எச்சரித்தார். 
   மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தின்கீழ், சீர்காழி நகரில் இயங்கிவரும் பொது விநியோகத் திட்ட அங்காடிகள் சிலவற்றில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து "தினமணி'யில் செய்தி வெளியானது. இதையடுத்து, சீர்காழி குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் விஜயராகவன் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் தரமாகவும், எடை குறைவு இல்லாமலும் வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சீர்காழி வட்ட வழங்கல் அலுவலகத்தில், நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 
  இதில் பங்கேற்று பேசிய அவர், நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்வது மட்டுமே முதன்மை பணியாக இருக்க வேண்டும் என்றும், பொதுமக்களை கட்டாயப்படுத்தி மளிகை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். அவ்வாறு விற்பனை செய்வதாக புகார் ஏதும் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
  எச்சரிக்கை விடுத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai