பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி

நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தெத்தி ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தெத்தி ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இத்திட்ட செயலாக்கமாக, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை பிளாஸ்டிக் கழிவு இல்லாத நாடாக மாற்றும் இயக்கப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 
இதன்படி, நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தெத்தி ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். தியாகராஜன் தலைமை வகித்து, பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சு. வெற்றிச்செல்வன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிச் செயலர், பணித்தளப் பொறுப்பாளர்கள், தூய்மைக் காவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com