Enable Javscript for better performance
செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 14th September 2019 10:55 AM  |   அ+அ அ-   |    |  

    vinayagar

    திருக்குவளை அருகே தியாகராஜபுரத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவையொட்டி, வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் 2-ஆம் கால யாகசாலை பூஜையும், காலை 9 மணிக்கு  மஹா பூர்ணாஹீதி நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 10.15 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம்  தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ம. ரமேஷ், எட்டுக்குடி முருகன்கோயில் செயல் அலுவலர் கா. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    kattana sevai