Enable Javscript for better performance
வைத்தீஸ்வரன்கோயிலை ஆன்மிக சுற்றுலா நகரமாக அறிவிக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வைத்தீஸ்வரன்கோயிலை ஆன்மிக சுற்றுலா நகரமாக அறிவிக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 14th September 2019 07:38 AM  |   அ+அ அ-   |    |  

    நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை ஆன்மிகச் சுற்றுலா நகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து, ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கை: வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோயில், சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசுர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும். நவகிரகங்களில் ஒன்றான அங்காரகன் வழிபாட்டுத் தலமாகவும் விளங்கி வருகிறது. 18 சித்தர்களில் ஒருவரான ஸ்ரீதன்வந்தரி சித்தர் பெருமான் இங்கு ஜீவசமாதி கொண்டுள்ளார். இக்கோயிலில், தற்போது திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இரு ஆண்டுகளில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. 
    பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன்கோயிலுக்கு நாள்தோறும் வரும் பல்லாயிரகணக்கான பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்மிகச் சுற்றுலா நகரமாக அரசு அறிவித்து, கோயிலை சுற்றி சிமென்ட் சாலை அமைத்து, உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும். தவிர அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேகோரிக்கையை வலியுறுத்தி, பொதுத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான அப்பர்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாளுக்கு நாள் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நவகிரக தலமாக உள்ளதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர்களும் அதிகம் பேர் வந்து செல்வதால், வைத்தீஸ்வரன் கோயிலை ஆன்மிகச் சுற்றுலா தலமாக அரசு அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    kattana sevai