5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு: திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 19th September 2019 02:26 AM | Last Updated : 19th September 2019 02:26 AM | அ+அ அ- |

மாணவர்களின் கல்வி இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் தமிழக கல்வித்துறையைக் கண்டித்து, திமுக மாணவர் அணி சார்பில் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, நாகை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் விஎஸ்என்.செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் சந்தோஷ், சிற்றரசன், கேசவன், மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் புஷ்பராஜ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெஸாண்டர், வழக்குரைஞர் சிவதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி, கல்வி இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் தமிழக கல்வித்துறையைக் கண்டித்து முழக்கமிட்டனர். நகர மாணவரணி அமைப்பாளர் எம்.கே.மருது நன்றி தெரிவித்தார்.