அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்கக் கோரிக்கை

அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்க, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்க, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாகை வட்டாரச் செயலாளர் கி. பாலசண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவதில்லை என்ற செய்தி சிலரால் உள்நோக்கத்துடன் பரப்பப்படுகிறது. ஆசிரியர்களை கண்காணிக்க கல்வி அலுவலர்கள் பலர் இருக்கும் நிலையில் ஆசியரியர்களின் காலதாமதம்  என்பது சாத்தியமில்லை.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் வருகைப் பதிவை  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகை வட்டாரக் கிளை வரவேற்கிறது. நாகை மாவட்டத்தில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை அமலில் உள்ளது. அக்டோபர் 3- ஆம் தேதி முதல் நாகை மாவட்டத்தில் உள்ள 240 நடுநிலைப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில், 180 நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும் பயோமெட்ரிக் கருவியைப் பொருத்த ஏதுவாக நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே  மடிக் கணினிகள் வழங்கப்பட்டு விட்டன. தற்போது, அந்தப் பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்படவுள்ளன. ஆனால் மீதமுள்ள 60 உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படாத  நிலையில், அப்பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவி பெற்று பொருத்தும் வேண்டும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனவே, தமிழக அரசின் திட்டங்களை செம்மையாக நிறைவேற்றும் வகையில் உதவி பெறும் பள்ளிகளுக்கும், மடிக்கணினி வழங்குவதற்கு  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com