மண் பாரத்துடன் செல்லும் லாரிகளால் சாலை சேதம்

சீர்காழி அருகே சேமங்கலத்தில் விதிமுறைகளை மீறி குளத்தில் மண் எடுத்துச் செல்லும் லாரிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சீர்காழி அருகே சேமங்கலத்தில் விதிமுறைகளை மீறி குளத்தில் மண் எடுத்துச் செல்லும் லாரிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சேமங்கலம் ஊராட்சியில் பிடாரிகுளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு நாள்களாக தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதைப் பயன்படுத்தி, விதிமுறைகளை மீறி குளத்தில் அதிக ஆழத்துக்கு மண்ணை வெட்டி எடுத்து, 100- க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
அதிக எண்ணிக்கையிலான லாரிகள் மண் பாரத்துடன் செல்வதால் திருநன்றியூர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. அந்த சாலையில் செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த குளத்தின் அருகே உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகள், மண் சரிவு ஏற்பட்டு சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com