வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கல்

வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த வங்கி மூலமாக 2018-2019- ஆம் ஆண்டு சாகுபடி பருவ காப்பீடு திட்டத்தில் பஞ்சநதிக்குளம் மேற்கு, கிழக்கு, மருதூர் தெற்கு, தென்னடார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 1,234 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 2 கோடியே 57 லட்சத்து 67 ஆயிரத்து 268  அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் ப. சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கி செயலாளர் எஸ்.சேகர், கூடுதல் செயலர் அசோகன் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்றனர்.
விடுபட்டவர்களுக்கு வழங்கக் கோரிக்கை: இந்த கூட்டுறவு வங்கி மூலம் காப்பீடு செலுத்திய பஞ்சநதிக்குளம் நடுசேத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த ஆண்டைப்போலவே நிகழாண்டும் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. இவர்களுக்கு உரிய காப்பீட்டுத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் 
நிறைவேற்றப்பட்டது.
திருக்கடையூரில்...
பொறையாறு, செப். 23: திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
திருக்கடையூர், காழியப்பநல்லூர், பிள்ளைபெருமாள்நல்லூர், கிள்ளியூர், மாணிக்கபங்கு, மருதம்பள்ளம், டி. மணல்மேடு ஆகிய 7 ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,694 பேர் இந்த சங்கத்தில் 2018-2019- ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு செய்திருந்தனர்.
இவர்களில், 882 பேருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ. 2.34 கோடி வழங்கும் பணியை பூம்புகார் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் தொடங்கி வைத்தார். மீதமுள்ள 812 விவசாயிகளுக்கு அடுத்தக் கட்டமாக பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருக்கடையூர் கூட்டுறவு சங்கத் தலைவர் தங்கராசு, துணைத் தலைவர் சிவலிங்கம், கூட்டுறவு வங்கி செயலாளர் ரவிசந்திரன், கும்பகோணம் கூட்டுறவு வங்கி கள மேலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com