Enable Javscript for better performance
சித்தமல்லி  நீரேற்று நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்ல பயன்படும் கொள்ளிடம் ஆற்றின் சித்தமல்லி நிரேற்று நிலையத்தில், எம்எல்ஏ பி.வி. பாரதி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
    சீர்காழி நகராட்சிக்கு உள்பட்ட 24 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில்,  கொள்ளிடம் ஆற்றில் சித்தமல்லி பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அங்குள்ள நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் எடுத்து, அதனை  ராட்சதக் குழாய்கள் மூலம் சுமார் 16 கி.மீ. தூரம் வரை சீர்காழி நகராட்சிக்கு கொண்டு வந்து, குளோரினேஷன் செய்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரித்து குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    இந்த குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால், குடிநீர் கலங்கலாக வருவது குறித்து நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, எம்எல்ஏ பிவி. பாரதி சித்தமல்லி நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது, நகர் பகுதிக்கு குடிநீர் எடுக்கும் கிணறுகளில் தட்டுப்பாடின்றி பல மாதங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் அளவுக்கு தண்ணீர் இருப்பதை பார்வையிட்டார்.
    தொடர்ந்து, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கிருபாகரனிடம், கலங்கலாக தண்ணீர் வருவதற்கு உரிய காரணிகளைக் கேட்டறிந்து சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார். 
    ஆய்வின்போது நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், நகராட்சி பொறியாளர் மெய்ப்பொருள், பணிதள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், நகர கூட்டுறவு வங்கித் துணைத் தலைவர் ஏவி.மணி, அதிமுகவிவைச் சேர்ந்த போகர்.ரவி, மருது, மணி ஆகியோர்
    உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai