Enable Javscript for better performance
நீட் தேர்வு பயிற்சி மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையம் செவ்வாய்க்கிழமை  தொடங்கியது. 
    திருமருகல், திட்டச்சேரி, புறாகிராமம், திருக்கண்ணபுரம், அம்பல், ஏனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையம் அரசால் தொடங்கப்பட்டுள்ளது. 
    விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை வகித்தார். மருத்துவர் ஷேக் அப்துல்லா சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai