Enable Javscript for better performance
மங்கநல்லூர் மக்கள் தொடர்பு முகாம் 3-ஆம் முறையாக ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மங்கநல்லூர் மக்கள் தொடர்பு முகாம் 3-ஆம் முறையாக ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 25th September 2019 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், மங்கநல்லூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் மூன்றாம் முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து நாகை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
    மாதந்தோறும் இரண்டாவது புதன்கிழமைகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம், நிகழ் மாதத்தில் நாகை மாவட்டம், குத்தாலம் வட்டத்துக்குள்பட்ட மங்கநல்லூரில் செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் இந்த முகாம், அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
    பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து மனு அளித்து தீர்வு பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    மூன்றாம் முறை...
    மங்கநல்லூரில் செப்டம்பர் 11-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், அன்றைய தினம் மொஹரம் பண்டிகை விடுமுறை என்பதையொட்டி, செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் நிர்வாக காரணங்களால் செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, மூன்றாம் முறையாக இந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai