கஜா புயல்: சவுக்கு, நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த ஆண்டில் வீசிய கஜா புயலின்போது பாதிப்புக்குள்ளான சவுக்கு, நெற்பயிர்களுக்கு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த ஆண்டில் வீசிய கஜா புயலின்போது பாதிப்புக்குள்ளான சவுக்கு, நெற்பயிர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த நிவாணத் தொகையை வழங்க வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்மேடு கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வேதாரண்யம் வட்டார விவசாய சங்கத் தலைவர் டி.வி. ராஜன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஒளிச்சந்திரன், நிர்வாகிகள் கணேசன், மணியன், சிவாஜி, செல்வராசு, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கஜா புயல் பாதித்து ஓராண்டை நெருங்கும் நிலையில், நெற்பயிர் பாதிப்புக்கு தமிழக முதல்வர் அறிவித்தபடி ஏக்கருக்கு ரூ.5,500 வீதம் நிவாரணம் வழங்கவும், சவுக்கு பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம், விடுபட்ட மா, முந்திரி, பூச்செடி உள்ளிட்ட தோட்டப் பயிர்களுக்கான நிவாரணத்தை உடனடியாக அளிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாண்யம் பகுதியில் பாகுபாடு இல்லாமல் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கவும், மானாவாரி நிலத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் முழக்கமிட்டனர். அத்துடன், கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கத் தவறியமைக்கு 
கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com