தீண்டாமை இல்லாத கிராமமாக திருப்பயத்தாங்குடி தேர்வு

தீண்டாமையைக் கடைப்பிடிக்கப்படாத கிராமமாக நாகை வட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட

தீண்டாமையைக் கடைப்பிடிக்கப்படாத கிராமமாக நாகை வட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருப்பயத்தாங்குடி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல், மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு பள்ளிக் கட்டடம் சீரமைத்தல், பள்ளிக் குழந்தைகள் நல மையம் கட்டுதல், கால்நடைகளுக்குத் தண்ணீர் தொட்டி அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன்படி, 2018-19-ஆம் ஆண்டில் நாகை மாவட்டத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல், ஆதிதிராவிட மக்கள் மதநல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக திருப்பயத்தாங்குடி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com