பூம்புகாரை முதன்மையான தொகுதியாக மாற்ற நடவடிக்கை

பூம்புகார் தொகுதியை முதன்மையான தொகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் உறுதிப்பட தெரிவித்தார். 

பூம்புகார் தொகுதியை முதன்மையான தொகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் உறுதிப்பட தெரிவித்தார். 
செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உள்பட்ட தலைச்சங்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், மக்கள் குறை கேட்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று பேசியது
தமிழகத்திலேயே 100 ஊராட்சிகளை உள்ளடக்கிய பெரிய தொகுதி பூம்புகார். இத்தொகுதியில் அதிகமான கடற்கரை கிராமங்கள் உள்ளன. மீனவர்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, பூம்புகாரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. 
மேலும் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்  இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்ததன் பயனாக தற்போது பயீர் காப்பீட்டு நிவாரணம் முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கபட்டு வருகின்றன. விரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறேன். பூம்புகார் தொகுதியை முதன்மையான தொகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு, ஒன்றிய ஆணையர் தியாகராஜன் தலைமை வகித்தார். தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா, அ.தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் சுந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஒன்றிய பொறியாளர் சோமசுந்தரம் வரவேற்றார். இதில், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கபாடிபாண்டியன், ராமலிங்கம், வன்னியர் சங்கத் தலைவர் சந்திரசேகரன், கட்சி நிர்வாகிகள் ராஜசேகர், மருதவாணன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இதைத்தொடர்ந்து மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், ஆக்கூர் மடப்புரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற குறைகேட்பு முகாம்களில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். இதில், 1000-க்கும் மேற்பட்டோர் மனுக்களை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com