முதியோர் உதவித்தொகை திடீர் நிறுத்தம்: வட்டாட்சியரிடம் மனு

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி கிராமத்தில் காரணமின்றி 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி கிராமத்தில் காரணமின்றி 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகையைத் தொடர்ந்து வழங்க வலியுறுத்தி, வட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
எடுத்துக்கட்டி ஊராட்சியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட முதியோருக்கு அரசு வழங்கக்கூடிய முதியோர் உதவித் தொகை கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தரங்கம்பாடி வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 
இதுகுறித்து எடுத்துக்கட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவரும், முதியோர் பாதுகாப்புக்குழு தொடர்பாளருமான மனோகரன் கூறியது:  எடுத்துக்கட்டி கிராமத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என 350 பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகை கிடைத்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக 40 பேருக்கு திடீரென எந்தவித அறிவிப்புமின்றி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. தரங்கம்பாடி வட்ட சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் திருமாறன் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது வட்டாட்சியரும் நடவடிக்கை எடுக்க மறுத்தால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
கடந்த 2 மாதங்களாக உதவித்தொகை இல்லாததால் அன்றாட உணவுக்கே வழியின்றி பிறரிடம் கையேந்தும் நிலைக்கு வந்து விட்டதாகவும், கணவர், பிள்ளைகள் யாருமே இல்லாததால் ஆதரவின்றி நிர்கதியாகி இருப்பதாகவும் வயதுமுதிர்ந்த சரோஜா, அஞ்சம்மாள் ஆகியோர் கண்ணீர் மல்க கூறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com