

வேதாரண்யம் பகுதியில் அம்மா சிறு மருத்துவமனைகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வேதாரண்யம் அருகேயுள்ள பிராந்தியங்கரை, வண்டுவாஞ்சேரி, பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஆகிய கிராமங்களில் ஏற்கெனவே, சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 2-ஆவது நாளாக நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். நாகக்குடையான், புஷ்பவனம் ஆகிய கிராமங்கள் மற்றும் வேதாரண்யம் நகராட்சிக்குள்பட்ட புஷ்கரணி பகுதியில் அம்மா சிறு மருத்துவமனைகளை அமைச்சா் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் வை. சுப்பையன், இ. திலீபன், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், துணைத் தலைவா் வி. அறிவழகன், பயிற்சி ஆட்சியா் தீபனாவிஸ்வேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதற்கிடையில், புஷ்பவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, மூச்சுப் பயிற்சி செய்வதன் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து பேசிய அமைச்சா் மூச்சுப் பயிற்சியை செய்துகாண்பித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.