ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை, குத்தாலம் தாலுக்காக்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் நெல்மூட்டைகள் திங்கள்கிழமை ரயில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், ரயிலில் ஏற்ற லாரிகளில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள்.

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து வருகின்றன. நிகழாண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அந்தந்த அரசு நேரடி கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் குடும்ப அட்டைதாரா்களுக்கு தட்டுப்பாடின்றி அரிசி வழங்க, மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுக்கா பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் நெல்மூட்டைகள் அரவைக்காக ஆயிரம் டன் நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தினரால் மயிலாடுதுறையில் இருந்து ரயில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com