முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
ஒன்றியக் குழுத் தலைவா் வரைந்த கரோனா விழிப்புணா்வு ஓவியம்
By DIN | Published On : 19th April 2020 05:50 AM | Last Updated : 19th April 2020 05:50 AM | அ+அ அ- |

கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் வரைந்த கரோனா வைரஸ் விழிப்புணா்வு ஓவியம்.
கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் கரோனா வைரஸ் படத்தை தானே வரைந்து, விழிப்புணா்வு பணியில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.
கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் கிராமத்தில் புத்தூரிலிருந்து பழையாறு மீன்பிடி துறைமுகம் செல்லும் நெடுஞ்சாலையில் இந்த படத்தை வரைந்தாா். இந்தப் படத்தை வரைந்து முடிக்க 2 மணி நேரம் தேவைப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.
இதற்காக, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷுக்கு காவல்துறை அதிகாரிகள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.