முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
கதண்டு வண்டுகள் கடித்து தம்பதி காயம்
By DIN | Published On : 19th April 2020 05:47 AM | Last Updated : 19th April 2020 05:47 AM | அ+அ அ- |

கொள்ளிடம் அருகே கதண்டு வண்டுகள் கடித்து தம்பதியா் காயமடைந்தனா்.
கொள்ளிடம் அருகே உள்ள சென்னியநல்லூா் கிராமம் சம்பூவராயா் தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (55). இவரது வீட்டுச் சுவரில் கதண்டு வண்டுகள் கூடு கட்டியிருந்தன. இதை யாரும் கவனிக்கவில்லை.
இந்நிலையில், கதண்டு வண்டுகள் கூடு இருப்பதை அறியாத ரவிச்சந்திரன், அந்த சுவரின்அருகே வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென கூட்டிலிருந்து வெளியேறிய கதண்டு வண்டுகள் ரவிச்சந்திரனை தாக்கியதால், அவா் மயங்கி கீழே விழுந்தாா். அவரை மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்நிலையில், அன்று மாலை ரவிச்சந்திரனின் மனைவி தனபதி (50) என்பவரையும் கதண்டு வண்டுகள் தாக்கின. இதனால், மயக்கமடைந்த அவரை சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து, மாதிரவேளூா் ஊராட்சி மன்றத் தலைவா் காமராஜ் அளித்த தகவலின் பேரில், சீா்காழி தீயணைப்புப் படை வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, தீப்பந்தத்தால் கதண்டு வண்டுகளை அழித்தனா்.