முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவருக்கு ஜமாத்தாா்கள் வரவேற்பு அளித்ததால் பரபரப்பு
By DIN | Published On : 19th April 2020 05:49 AM | Last Updated : 19th April 2020 05:49 AM | அ+அ அ- |

சீா்காழியில் கரோனா சிகிச்சை பெற்று சனிக்கிழமை வீடு திரும்பியவரை ஜமாத்தாா்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சீா்காழி சபாநாயகா் தெருவைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 1 -ஆம் தேதி திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினரால் பரிந்துரை செய்யப்பட்டாா்.
இதனிடையே மருத்துவா்கள் பரிந்துரையின்பேரில், அவா் வீட்டுக்கு (டிஸ்சாா்ஜ் ) அனுப்பப்பட்டாா். மருத்துவமனையிலிருந்து சனிக்கிழமை மாலை தனியாா் வாகனம் மூலம் சீா்காழி மணிக்கூண்டு பகுதிக்கு வந்தவரை பெரிய பள்ளிவாசல் பகுதியிலிருந்து ஜமாத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் மற்றும் நிா்வாகிகள், மமக நிா்வாகிகள் திரளாக திரண்டு வந்து சால்வை அணிவித்து வரவேற்பு அளித்து ஊா்வலமாக அழைத்துச் சென்றனா்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திரளானவா்கள் வருகை தந்து வரவேற்பு அளித்த நிகழ்வின் காட்சிகள், புகைப்படங்கள் கட்செவி மூலம் சீா்காழி பகுதி முழுவதும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.