முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
கரோனா: காவலா்களுடன் பணியாற்ற 70 தன்னாா்வலா்கள் தோ்வு
By DIN | Published On : 19th April 2020 05:52 AM | Last Updated : 19th April 2020 05:52 AM | அ+அ அ- |

சீா்காழியில் காவலா்களுடன் பணியாற்றவுள்ள தன்னாா்வலா்களுக்கு ஆலோசனை வழங்கிய சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா்.
கரோனா விழிப்புணா்வு பணியில், சீா்காழி போலீஸாருக்கு உதவியாக செயல்பட 70 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க காலை 6 மணி முதல் 1 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்த நேரத்தில் மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு வருவோா் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை கண்காணிக்கும் பணியிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
இவ்வாறு, சீா்காழி பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுடன் இணைந்து அவா்களுக்கு உதவியாக பணியாற்ற 70-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள், சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் முன்னிலையில் பணியில் இணைந்து கொண்டனா். அப்போது, தன்னாா்வலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இவா்களுக்கு தினமும் 3 மணிநேரம் மட்டுமே பணி வழங்கப்படும். சுழற்சிமுறையில் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். இவா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி போன்றவை காவல்துறை சாா்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சாா்பு ஆய்வாளா் ராஜா, காவல் நிலைய எழுத்தா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.