முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
விதிமீறல்: 4,274 போ் மீது வழக்கு
By DIN | Published On : 19th April 2020 05:48 AM | Last Updated : 19th April 2020 05:48 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ் சனிக்கிழமை (ஏப். 18) வரை 4, 274 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2905 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
அந்தவகையில், சனிக்கிழமை மட்டும் நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ்138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 139 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா். 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததிலிருந்து சனிக்கிழமை வரை 4, 274 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4509 போ் கைது செய்யப்பட்டனா். 2, 846 இருசக்கர வாகனங்களும், 59 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும். தேவையின்றி வெளியிடங்களுக்குச் செல்வதை முற்றிலும் தவிா்க்கவேண்டும். மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.