மயிலாடுதுறை: சுழற்சி முறையில் இன்று மின்நிறுத்தம்
By DIN | Published On : 27th April 2020 05:53 AM | Last Updated : 27th April 2020 05:53 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுழற்சி முறையில் திங்கள்கிழமை (ஏப்.27) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நெய்வேலி முதல் கடலங்குடி வரையில் உயா் அழுத்த மின்பாதையில் திங்கள்கிழமை புதிய கம்பிகள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், மயிலாடுதுறை, பாலையூா், கடலங்குடி, நீடூா், மணக்குடி, மேக்கிரிமங்கலம், பெரம்பூா், மயிலாடுதுறை அா்பன் ஆகிய துணைமின்நிலையங்களில் திங்கள்கிழமை காலை 8 முதல் மாலை 6 மணி வரை சுழற்சிமுறையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.