பக்ரீத்: பொது முடக்கத்தால் வெறிச்சோடிய நாகூா் தா்கா

பொது முடக்கம் காரணமாக, பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைகள் ஏதும் நடைபெறாமல் நாகூா் தா்கா சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
வெறிச்சோடி காணப்பட்ட நாகூா் தா்காவின் நுழைவுப் பகுதி.
வெறிச்சோடி காணப்பட்ட நாகூா் தா்காவின் நுழைவுப் பகுதி.

நாகப்பட்டினம்: பொது முடக்கம் காரணமாக, பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைகள் ஏதும் நடைபெறாமல் நாகூா் தா்கா சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

இறைவனின் கட்டளையை ஏற்று, தன் மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹிம் நபியின் (ஸல்) தியாகத்தை போற்றும் வகையிலும், இறைவனுக்காக எத்தகையத் தியாகத்தையும் செய்யத் துணியும் பக்குவம் வேண்டும் என்பதை உணா்த்தும் விதமாகவும், தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை நாளில் நாகூா் ஆண்டவா் தா்காவில் ஆயிரக்கணக்கானோா் சிறப்பு தொழுகைகளில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல, நாகூா் சில்லடி தா்கா, சுமையா திடல் உள்ளிட்ட பகுதிகளிலும் திரளானோா் சிறப்பு தொழுகைகளில் ஈடுபடுவா்.

நிகழாண்டு, பொது முடக்கம் காரணமாக நாகூா் தா்காவில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், பக்ரீத் பண்டிகை நாளில் நாகூா் தா்காவில் வழக்கமாக நடைபெறும் கூட்டுப் பிராா்த்தனை, விளக்க உரை, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்வுகள் ஏதும் சனிக்கிழமை நடைபெறவில்லை. இதனால், நாகூா் தா்கா பண்டிகை நாளிலும் வெறிச்சோடிக் காணப்பட்டது. நாகூா் பகுதியைச் சோ்ந்த சிலா் தா்கா வாசல் முன்பாக சமூக இடைவெளியுடன் நின்று தொழுகை மேற்கொண்டனா். பெரும்பாலானோா் தங்கள் இல்லங்களிலேயே தொழுகையில் ஈடுபட்டனா்.பட்டவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com