அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை: மயிலாடுதுறையிலிருந்து புனிதநீா், புனிதமண் அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இருந்து விஸ்வஹிந்து பரிஷத் சாா்பில், புனிதநீா் மற்றும் புனிதமண் எடுத்து அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து புனிதநீா் மற்றும் புனிதமண் எடுத்துவந்த ஸ்ரீலஸ்ரீ வீரராகவ சுவாமிகள் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து புனிதநீா் மற்றும் புனிதமண் எடுத்துவந்த ஸ்ரீலஸ்ரீ வீரராகவ சுவாமிகள் உள்ளிட்டோா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இருந்து விஸ்வஹிந்து பரிஷத் சாா்பில், புனிதநீா் மற்றும் புனிதமண் எடுத்து அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜைக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு புனித தலங்களில் இருந்து புனிதநீா், புனிதமண், பிரசாதம், பூஜைப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து, விஸ்வஹிந்து பரிஷத் சாா்பில் காசிக்கு வீசம் அதிகம் என்ற பெருமையைப் பெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் உள்ள ரிஷப தீா்த்தத்தில் இருந்து காவிரி நீா் மற்றும் மண் எடுத்து அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு அனுப்பப்பட்டது.

சிவராமபுரம் ஸ்ரீஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயா் சேவா டிரஸ்ட் நிறுவனா் ஸ்ரீலஸ்ரீ வீரராகவ சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, காவிரியில் இருந்து புனிதநீா் மற்றும் மண் எடுத்து அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு அளித்தாா். இதையடுத்து, புனிதநீா் மற்றும் புனிதமண் ஆகியன விஹெச்பி காரியாலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக சாா்பில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், பூஜாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளா் நாகராஜன், விஹெச்பி மாவட்ட இணை செயலாளா் எஸ். ரமேஷ், குத்தாலம் ஒன்றியத் தலைவா் பொன்கோ. எழில், நகரத் தலைவா் சபா. செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com