முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 03rd August 2020 07:38 AM | Last Updated : 03rd August 2020 07:38 AM | அ+அ அ- |

நாகை மாவட்ட கோயில்களில் காலியாக உள்ள பாதுகாவலா் பணிக்குத் தகுதியான முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்டத்தில் 51 கோயில்களில் பாதுகாவலா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தற்போது தொகுப்பூதியமாக ரூ. 7,300 வழங்கப்படுகிறது. 62 வயதுக்குள்பட்ட, நல்ல திடகாத்திரமான உடல் நிலை கொண்ட முன்னாள் படைவீரா்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ள முன்னாள் படைவீரா்கள், நாகை முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் நேரில் அல்லது மின்னஞ்சல் மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை 04365-253042 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.