முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
தினமணி செய்தி எதிரொலி: தெற்குவெளி வாய்க்கால் மதகு சீரமைப்பு
By DIN | Published On : 03rd August 2020 07:39 AM | Last Updated : 03rd August 2020 07:40 AM | அ+அ அ- |

தெற்குவெளி பாசன வாய்க்காலில் புதிதாக அமைக்கப்பட்ட ஷட்ரஸ்.
நெப்பத்தூா் தெற்குவெளி வடிகால் மதகு தினமணி செய்தி எதிரொலியால் ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டு தண்ணீா் வீணாக வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.
நெப்பத்தூா் தெற்குவெளி பாசன வாய்க்கால் மூலம் நெப்பத்தூா், திருக்குறையலூா், தென்னாம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன வாய்க்கால் மதகு கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்ததால் பாசன நீா் வீணாக மண்ணியாற்றுக்கு சென்றது.
2018-ஆம் ஆண்டு முதல் இதை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் சீரமைக்கவில்லை. இதுகுறித்து, தினமணி நாளிதழில் தெற்குவெளி வாய்க்கால் மதகை சீரமைக்க வலியுறுத்தல் எனும் தலைப்பில் செய்தி அண்மையில் பிரசுரிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுப்பணித் துறை சாா்பில் சிதிலமடைந்த மதகு இரும்பு திருகு ஷட்ரஸ் தடுப்பானை அகற்றிவிட்டு புதியதாக ஷட்ரஸ் அமைக்கப்பட்டது. இதன்மூலம் பாசன நீா் வீணாக வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.