கீழையூரில் விவசாய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூரில் விவசாய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
கீழையூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்புகள்.
கீழையூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்புகள்.

மத்திய அரசின் மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து தேசம் தழுவிய ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக கீழையூர் கடைத்தெருவில் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், ஆகிய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் தங்கமணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில் விவசாய சங்க மாநிலத் தலைவர் சுப்ரமணியன் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன்மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஒன்றிய செயலாளர் டி.கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்களான பி. எம். உத்திராபதி, பி.இராமலிங்கம், என். பன்னீர்செல்வம்,ஏ. முருகையன் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்து சுகாதாரத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் ஒரு மாதத்திற்கு 10 கிலோ அரிசி தானியங்கள் அடுத்த ஆறு மாதத்திற்கு இலவசமாக வழங்கிட வேண்டும், வருமான வரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 7,500 ரூபாய் வீதம் ஆறு மாதத்திற்கு வழங்க வேண்டும்,

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பினை 200 நாள்களாக உயர்திடு. தினக்கூலியை 600 ரூபாய் வழங்கிடு. பேரூராட்சி மக்களுக்கும் பயன்படும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், விவசாயத்திற்கு வீடுகளுக்கு நெசவாளர்களுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது.

அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பண்ணை வர்த்தகத்தை அனுமதிக்க கூடாது மற்றும் விவசாயத்திற்கு எதிரான நிர்வாக உத்தரவுகளை ரத்துசெய்ய வேண்டும், புலம்பெயர்தொழிலாளர்களின் பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com