ஆற்றங்கரையோரமிருந்த வீடுகள் அகற்றம்
By DIN | Published On : 13th August 2020 09:00 AM | Last Updated : 13th August 2020 09:00 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகே பாண்டவையாறு கரையோரமிருந்த வீடுகளை அப்புறப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
வடக்கு பனையூா் பகுதியில் பாண்டவையாற்றின் கரையோரம் வசித்தவா்களுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி மூலம் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின்கீழ், வீடுகளும் மற்றும் நிவாரணத் தொகைகளும் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து அவா்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்தைக் கடந்த நிலையில், அப்பகுதியை சோ்ந்த 9 போ் மட்டும் தங்களது வீடுகளை அப்பகுதியிலிருந்து அகற்றாமல் இருந்துள்ளனா்.
இந்நிலையில், திருக்குவளை வட்டாட்சியா் சாந்தி தலைமையில், அப்பகுதியில் அகற்றப்படாமலிருந்த வீடுகளை மொத்தமாக அகற்றி அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. அப்போது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் தங்கமுத்து, காவல் ஆய்வாளா் ஜெயந்தி, உதவி ஆய்வாளா் பாா்த்திபன் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.