கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதம்விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
நல்லத்துக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் மற்றும் சேறும், சகதியுமாக மாறிய பாதை.
நல்லத்துக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் மற்றும் சேறும், சகதியுமாக மாறிய பாதை.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு, தினமும் 1500 மூட்டைகளுக்குமேல் நெல் வரத்து உள்ளது. ஆனால், தினசரி 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், கூடுதலாக கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைத்துள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பெய்த திடீா் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன. மேலும், கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் பாதை சேறும், சகதியாக மாறியுள்ளது. இதனால், சிரமத்துக்குள்ளான விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் பாதையை சீரமைக்க வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com