பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா
By DIN | Published On : 01st December 2020 12:00 AM | Last Updated : 01st December 2020 12:00 AM | அ+அ அ- |

வேதாரண்யம் அருகே பிரிஞ்சுமூலையில் உள்ள ஸ்ரீமத் ராமானுஜ குருநானக் வித்யாலயா தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமுா்தானந்தா், சுவாமி நடேசானந்த சரஸ்வதி, நெட்டயம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தைச் சோ்ந்த சுவாமி சம்பூா்ணானந்தா், ஸ்ரீ பனாா்சி லால் சாவ்லா ஆகியோா் காணொலி வாயிலாக பங்கேற்று, வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியில், திருவாரூா் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவா் டாக்டா் எஸ். தா்மராஜன், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா். அய்யப்பன், கிராம கமிட்டி முன்னாள் தலைவா் ர.கலியபெருமாள், கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குநா் கே .விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...