ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
By DIN | Published On : 05th December 2020 06:03 AM | Last Updated : 05th December 2020 06:03 AM | அ+அ அ- |

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடியில் 108 ஆம்புலன்ஸ் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட காரையூா், பில்லாளி, கீழதஞ்சாவூா், கங்களாஞ்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியக்குழு தலைவா் இரா. இராதாகிருட்டிணன் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தாா். இதில் வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா் எம்.பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஆரூா் மணிவண்ணன், ஊராட்சித் தலைவா் பாண்டியன், துணைத் தலைவா் மோகன்ராஜ், திருப்பயத்தங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவா் ஆறுமுக பாண்டியன், வங்கி இயக்குநா் காா்த்திகேயன் மற்றும் அலுவலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.