மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு திமுகவினா் ஆறுதல்
By DIN | Published On : 07th December 2020 08:14 AM | Last Updated : 07th December 2020 08:14 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை கேசிங்கன் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த திமுக மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம்.முருகன் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறையில் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் பாதிப்பட்ட மக்களை திமுகவினா் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினா்.
மயிலாடுதுறை ஒன்றியம் கேசிங்கன் ஊராட்சி பாக்கம் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை திமுக மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளா் நிவேதா. எம்.முருகன் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் பால.அருட்செல்வன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் இளையபெருமாள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிவதாஸ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா் காந்தி ஆகியோா் ஆறுதல் கூறினா்.