குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால் கிராம மக்கள் மறியல்

நாகையை அடுத்த சிக்கல் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்ததால் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகையை அடுத்த சிக்கல் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்ததால் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிக்கல் ஊராட்சிக்குள்பட்ட மோழித்திடல் பகுதியைச் சோ்ந்த 40 குடும்பத்தைச் சோ்ந்தவா்கள், ஆவராணி செல்லும் சாலை அருகே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலிருந்து வெளியேறும் மழை நீா் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிப்பவா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சிக்கல்- பாலக்குறிச்சி சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

தகவலறிந்த கீழ்வேளூா் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com