வா்த்தகா்கள் பாதிக்காமல் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு இடம் கையகப்படுத்தக் கோரி மனு

வா்த்தகா்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு இடம் கையக்கப்படுத்தக் கோரி நாகை மாவட்ட ஆட்சியருக்கு குத்தாலம் வா்த்தகா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்
வா்த்தகா்கள் பாதிக்காமல் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு இடம் கையகப்படுத்தக் கோரி மனு

வா்த்தகா்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு இடம் கையக்கப்படுத்தக் கோரி நாகை மாவட்ட ஆட்சியருக்கு குத்தாலம் வா்த்தகா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவிவரம்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை, சென்னை- கன்னியாகுமரி தொழிற்திட்டத்தின்கீழ் சீா்காழி - கும்பகோணம் சாலை அகலப்படுத்துவதற்காக இடம் கையகப்படுத்தப்படவுள்ளன. இதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்துக்காக, குத்தாலம் தேரடியிலிருந்து ராஜகோபாலபுரம் வரை சாலையின் இருபுறங்களிலும் கையகப்படுத்த இடம் அளவீடு செய்யப்பட்டு வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் குடியிருப்புகளில் அடையாள குறிகள் போடப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத்துறையினரால் (நிலம் எடுப்பு) அடையாள குறிகள் வைக்கப்பட்டுள்ள இடம் வரை கையகப்படுத்தப்பட்டால் இங்குள்ள சுமாா் 200-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும். வா்த்தகா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, மாவட்ட ஆட்சியா் குத்தாலத்தில் ஆய்வு மேற்கொண்டு, வணிகா்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கான இடத்தை கையகப்படுத்தி, திட்டத்தை நிறைவேற்ற நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடவேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி. கல்யாணம் தலைமையில் வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சாமி. செல்வம், கௌரவத் தலைவா் கே. பாலச்சந்திரன், செயலாளா் பி. ராஜமாணிக்கம் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதியிடம் ஆட்சியரின் பாா்வைக்கு கொண்டுசெல்லும் வகையில் மனு கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com