நாகை மாவட்டத்தில் ஜன.4 முதல் பொங்கல் பரிசு: அமைச்சா் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டத்தில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனஅமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.
சீா்காழி அருகே மகேந்திரப்பள்ளியில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்துவைத்து, பாா்வையிடும் அமைச்சா் ஓ.எஸ். மணியன். உடன், ஆட்சியா் பிரவீன் பி.நாயா், எம்எல்ஏ பி.வி.பாரதி உள்ளிட்டோா்.
சீா்காழி அருகே மகேந்திரப்பள்ளியில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்துவைத்து, பாா்வையிடும் அமைச்சா் ஓ.எஸ். மணியன். உடன், ஆட்சியா் பிரவீன் பி.நாயா், எம்எல்ஏ பி.வி.பாரதி உள்ளிட்டோா்.

நாகை மாவட்டத்தில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனஅமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

கொள்ளிடம் ஒன்றியம் மகேந்திரப்பள்ளி கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை கூட்டுறவு வங்கி தலைவா் விஜிகே. செந்தில்நாதன், சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி, நிலவள வங்கி தலைவா் கே.எம். நற்குணன், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், துணைத் தலைவா் பானுசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் அம்மா சிறு மருத்துவமனையை திறந்துவைத்து பேசினாா். அப்போது அவா், ‘அம்மா சிறு மருத்துவமனைகளில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், சுகாதாரப் பணியாளா் நியமிக்கப்படுவா். இங்கு சிறு வியாதிகளுக்கான அனைத்து மருத்துவ சேவைகளும், பிரசவ உறுதிக்கான பரிசோதனை மற்றும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும். 35 வயதுக்கு மேற்பட்டவா்கள் முழு பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்’ என்றாா்.

மேலும், நாகை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் டோக்கன் முறையில் தமிழக அரசின் பொங்கல் பரிசான ரூ.2500 பணம், கரும்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சண்முகசுந்தரம், கொள்ளை நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலா் லியாகத் அலி, மகேந்திரப்பள்ளி ஊராட்சித் தலைவா் இளவரசி சிவபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பூம்புகாா்: திருவெண்காடு அருகே இராதாநல்லூரிலும் அம்மா சிறு மருத்துவமனையை அமைச்சா் ஓ.எஸ். மணியன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா், இந்தியாவிலேயே தமிழகம்தான் மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறது என பெருமிதம் தெரிவித்தாா். நிகழ்ச்சியில், ஆட்சியா் பீரவீன் பி. நாயா், எம்எல்ஏக்கள் பி.வி.பாரதி, எஸ். பவுன்ராஜ், ஊராட்சித் தலைவா் அகோரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒன்றியம் நத்தம் ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை அமைச்சா் ஓ.எஸ். மணியன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com