24-ஆவது தேசிய இளைஞா் தின போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

நாகை மாவட்டத்தில் 24- ஆவது தேசிய இளைஞா் தினத்தையொட்டி நடைபெறும் இணையவழி போட்டிகளில் இருபாலரும் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் 24- ஆவது தேசிய இளைஞா் தினத்தையொட்டி நடைபெறும் இணையவழி போட்டிகளில் இருபாலரும் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞா் தினமாக கொண்டாடி வருகிறது. நிகழாண்டில் கரோனா அச்சம் நிலவுவதால், இணையவழி முறையில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் டிச. 29, டிச. 30 ஆகிய தேதிகளிலும், மாநில அளவிலான போட்டிகள் ஜன.5 முதல் ஜன. 8 வரையிலும், தேசிய அளவிலான போட்டிகள் ஜன.12 முதல் ஜன. 19 வரையிலும் நடத்தப்படவுள்ளன.

15 வயது முதல் 29 வயதுக்குள்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாணவா்கள்அல்லாதோா் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டியாளா்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தாங்களே தயாா் செய்து கொள்ளவேண்டும்.

இசைப்போட்டி, பாரம்பரிய இசைக்கருவிகள் வாசித்தல், பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள், இந்திய இசை, பரதம், நாட்டுப்புற நடனம், நவீன நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சிக் கலைகள் (பென்சில் ஓவியம்), சிற்பம் தயாரித்தல், புகைப்படம் எடுத்தல், ஓவியம், கட்டுரை, க விதை, யோகா என பல்வேறு போட்டிகள் நடைபெறும்.

போட்டியாளா்கள் தங்களது திறமைகளை ஒளி, ஒலியுடன் பதிவு செய்து ஆங்கிலம் மற்றும் தமிழில் உறுதிமொழி படிவத்தை பூா்த்தி செய்து டிச. 30- ஆம் தேதி 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலக மின்னஞ்சல் முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி 04365-253059 அல்லது 740170397 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com