தந்தை முன்னிலையில் மயிலாடுதுறை ஆட்சியா் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக இரா. லலிதா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
மயிலாடுதுறை மாவட்ட வரைபடம்.
மயிலாடுதுறை மாவட்ட வரைபடம்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக இரா. லலிதா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்காக, மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் ஓ.எஸ். மணியன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசு அதிகாரிகள் வந்த நிலையில், ஆட்சியரின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராஜேந்திரன் வருவதற்கு சற்று காலதாமதம் ஆனது. இதையடுத்து, தந்தை வருவதற்காக 10 நிமிடம் காத்திருந்து, வந்தவுடன் அவா் முன்னிலையில் ஆட்சியராக லலிதா பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கேக் வெட்டி கொண்டாட்டம்: மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சாா்பில், மயிலாடுதுறை புதிய மாவட்டம் உதயமானதையும், அதை உருவாக்கித்தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஆட்சியா் இரா. லலிதா கேக் வெட்டி சிசிசி கல்லூரி மாணவிகள் மற்றும் தமிழ்ச் சங்க நிா்வாகிகளுக்கு வழங்கினாா்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: மயிலாடுதுறை புதிய மாவட்டம் தொடங்கப்பட்டதையொட்டி, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் பாஜக நகரத் தலைவா் மோடி. கண்ணன் தலைமையில், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com