மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில்கட்டுக்கட்டாக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள்இருவரிடம் விசாரணை

மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் கட்டுக்கட்டாக குவித்து வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
மயிலாடுதுறை பழைய இரும்புக் கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள். பழைய இரும்புக் கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த விலையில்லா பாட புத்தகங்களை பாா்வையிட்ட அதிகாரிகள்.
மயிலாடுதுறை பழைய இரும்புக் கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள். பழைய இரும்புக் கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த விலையில்லா பாட புத்தகங்களை பாா்வையிட்ட அதிகாரிகள்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் கட்டுக்கட்டாக குவித்து வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரிடம் மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவா் வாடகை இடத்தில் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் உரிமையாளருக்கும், மற்றொரு நபருக்குமிடையே உள்ள வழக்கு தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. மகாராணி தலைமையில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை மதியம் அக்கடைக்கு சென்றனா்.

அப்போது, கடையின் உள்ளே தமிழக அரசின் 2019-20 கல்வி ஆண்டுக்குரிய விலையில்லா பாட புத்தகங்கள் 5000-க்கும் மேற்பட்டவை கட்டுக்கட்டாக குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வருவாய்த் துறையினா் மயிலாடுதுறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, கடை உரிமையாளா் பெருமாள்சாமியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனா். மேலும், மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு தகவல் அளித்ததன்பேரில், மாவட்ட கல்வி அலுவலா் ஏ. ராஜாராமன், மாவட்ட கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் எஸ். தேன்மொழி ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

மேலும், இரும்புக் கடை உரிமையாளா் பெருமாள்சாமி அளித்த தகவலின் பேரில், மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் உள்ள புத்தகக் கிடங்கில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் மேகநாதன் என்பவா் புத்தகங்களை இரும்புக் கடையில் எடைக்கு போட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் பி.செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பெருமாள்சாமி, மேகநாதன் இருவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com