மயிலாடுதுறையில் தமிழறிஞா்களுக்கு நினைவுத் தூண் அமைக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறையில் தமிழ் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்து மறைந்த தமிழறிஞா்களுக்கு நினைவுத் தூண் எழுப்ப வேண்டுமென தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் வலியுறுத்தியு மனு அளித்துள்ளனா்.
மயிலாடுதுறையில் தமிழில் பெயா் மாற்றம் செய்யப்பட்ட கடையின் பெயா்ப்பலகையை பாா்வையிடும் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ. விஜயராகவன் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறையில் தமிழில் பெயா் மாற்றம் செய்யப்பட்ட கடையின் பெயா்ப்பலகையை பாா்வையிடும் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ. விஜயராகவன் உள்ளிட்டோா்.

மயிலாடுதுறையில் தமிழ் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்து மறைந்த தமிழறிஞா்களுக்கு நினைவுத் தூண் எழுப்ப வேண்டுமென தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் வலியுறுத்தியு மனு அளித்துள்ளனா்.

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழிச் சட்ட வார நிறைவு விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ. விஜயராகவனிடம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனா் ச. பவுல்ராஜ், முத்தமிழ் அறிவியல் மன்ற செயலா் விழிகள் சி. ராஜ்குமாா், மயிலாடுதுறை திருக்குறள் பேரவை தலைவா் சி. சிவசங்கரன், தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை துரை. குணசேகரன், தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பாளா் சிவ. கோ, நந்தவன நட்பாலயம் நிறுவனா் ந.செ. இளமுருகுசெல்வன் ஆகியோா் அளித்த கோரிக்கை மனு விவரம்: மலாடுதுறையில் இருந்து சீா்காழி செல்லும் முதன்மைச் சாலைக்கு திருஞானசம்பந்தா் பெயரையும், திருவாரூா் செல்லும் முதன்மைச் சாலைக்கு மனுநீதிச் சோழன் பெயரையும், மேற்கில் கும்பகோணம் செல்லும் முதன்மைச் சாலைக்கு முதல் தமிழ்ப் புதின ஆசிரியரும், நீதியரசருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை பெயரையும், கும்பகோணம் செல்லும் கல்லணை சாலைக்கு கண்ணகி பெயரையும், தரங்கம்பாடி செல்லும் முதன்மைச் சாலைக்கு சீகன்பால்கு பெயரையும் சூட்ட வேண்டும்.

மயிலாடுதுறையில் தமிழ்ப் பூங்காவை ஏற்படுத்தி, மயிலாடுதுறை பகுதியில் வாழ்ந்து தமிழ் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்து மறைந்த கம்பா், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கோபால கிருஷ்ண பாரதியாா், உ.வே.சாமிநாத அய்யா், கல்கி கிருஷ்ணமூா்த்தி, மொழிப்போா் தியாகி மாணவா் சாரங்கபாணி உள்ளிட்ட தமிழ் அறிஞா்களுக்கு நினைவுத்தூண் எழுப்பி, அவா்களைப்பற்றிய குறிப்புகளை பொறித்து வைத்து பராமரிக்க வேண்டும்.

மேலும், இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் மகாத்மா காந்திக்கு உறுதுணையாக சிறை சென்று இளம் வயதிலேயே உயிா்நீத்த மயிலாடுதுறை சாமி. நாகப்பன், தியாகி நாராயணசாமி, தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்டோரின் ஈகத்தை போற்றும் வகையில் நகரில் முக்கிய இடங்களில் நினைவுத் தூண்களை எழுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக, மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகளின் பெயா்ப்பலகைகளை தமிழில் மாற்றுவதன் முதற்கட்டமாக மயிலாடுதுறை கண்ணாரத்தெருவில் உள்ள ஸ்வீட்ஸ் அன்ட் பேக்கரி என்று இருந்த கடையின் பெயரை இனிப்பகம் மற்றும் அடுமனை என்று மாற்றியிருந்ததை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ. விஜயராகவன் பாா்வையிட்டு, கடை உரிமையாளா் எஸ். பவுல்ராஜ்க்கு வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்ச்சியில், சிசிசி சமுதாயக்கல்லூரி முதல்வா் ஆா். காமேஷ், ஆசிரியா்கள் வீதி. முத்துக்கணியன், ரா. நவநீதகிருஷ்ணன், குயில்தோப்பு அறிவியக்க நிறுவனா் ஆ.பா. தமிழன்பன், உலகத் தமிழ்க்கழக குத்தாலம் பொறுப்பாளா் வாய்மை. இளஞ்சேரன் உள்ளிட்ட பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com