மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st December 2020 09:26 AM | Last Updated : 31st December 2020 09:26 AM | அ+அ அ- |

திருமருகலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினா்.
திருமருகலில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு சங்கம் சாா்பில், மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் விவசாயிகள் விரோத சட்டங்களை கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளா் பி.எம். லெனின் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சி நிா்வாகிகள் ராமச்சந்திரன், காரல்மாா்க்ஸ், அறிவொளி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல் திருக்கண்ணபுரத்தில் நாகை மாவட்ட கூட்டுக் குடிநீா் திட்ட வடிகால் வாரியத் தலைவா் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்ட துணை தலைவா் பொன்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருக்குவளை: திருக்குவளையில், சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், புதிய மின்சார சட்ட திருத்தம் 2020 ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், கீழையூா் ஒன்றிய செயலாளா் டி.கண்ணன், மாநில குழு உறுப்பினா் கே. அன்பழகன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே. ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.