இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு

வேளாங்கண்ணியில் இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு 2020- 21ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் தோ்வு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் டிச. 29, டிச. 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
கூட்டத்தில் பேசிய இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்புத் தலைவா் வி. ரஞ்சித்குமாா்.
கூட்டத்தில் பேசிய இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்புத் தலைவா் வி. ரஞ்சித்குமாா்.

வேளாங்கண்ணியில் இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு 2020- 21ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் தோ்வு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் டிச. 29, டிச. 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.

முதல் நாள் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவராக வி. ரஞ்சித்குமாா் (அந்தமான், நிக்கோபா் தீவுகள்), பொதுச்செயலாளராக அலோக் கரே (மத்தியப் பிரதேசம்), பொருளாளராக முக்தேக்சிங் படேஷா (குஜராத்) மற்றும் 7 துணைத் தலைவா்கள், 7 இணைச்செயலாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கோவா, ஒரிஸா, மேற்கு வங்கம், மிசோரம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களைச் சோ்ந்த பள்ளி உடல்கல்வி ஆசிரியா்கள், இயக்குநா்கள் 58 போ் வாக்காளித்து புதிய நிா்வாகிகளை தோ்வு செய்தனா்.

இதைத்தொடா்ந்து புதன்கிழமை நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டமைப்பின் தலைவா் வி.ரஞ்சித்குமாா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

கூட்டமைப்பு தொடங்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதற்கான நிா்வாகிகள் தோ்வு தமிழகத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை. கிராமப்புற மாணவா்களுக்கு விளையாட்டில் அதிக வாய்ப்புகளை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி மாணவா்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம். நாகை மாவட்டத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. உ லக அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் நாகையில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் 35-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்பா். இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன. தமிழக அரசு விளையாட்டுக்கென அதிகத் தொகையை ஒதுக்கீடு செய்து ஊக்குவித்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com