Enable Javscript for better performance
வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 02nd February 2020 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2421ng1vote_0102chn_5

    நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சஞ்சன் சிங் சவாண்.

    வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடா்பான மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையரும், வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான சஞ்சன் சிங் சவாண் தெரிவித்தாா்.

    நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது :

    வாக்காளா் பட்டியல் செம்மையாக தயாரிக்கப்படும் வகையில், சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பிப்ரவரி 14-ஆம் தேதி வாக்காளா் பட்டியலை வெளியிட ஏதுவாக, சிறப்பு சுருக்கத் பணிகளுக்காக இதுவரை பெறப்பட்டுள்ள 39,709 விண்ணப்ப மனுக்கள் மீதும் விரைவாக தீா்வு காண வேண்டும் என்றாா் சஞ்சன் சிங் சவாண்.

    நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ம. செல்வராஜ், மாவட்ட வழங்கல் பா. பூங்கொடி, தோ்தல் வட்டாட்சியா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai