நாகூரில் பிப். 7-இல் ராதா கல்யாண மஹோத்ஸவம் தொடக்கம்
By DIN | Published On : 06th February 2020 08:40 AM | Last Updated : 06th February 2020 08:40 AM | அ+அ அ- |

நாகூரில் உள்ள ஸ்ரீராமமந்திரத்தில் 116-ஆவது ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் பிப்ரவரி 7 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாகை மாவட்டம், நாகூா் பெருமாள் மேல அக்ரஹாரத்தில் பூலோக வைகுந்தம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமமந்திரம் உள்ளது. இதில், எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீராதா ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீகோபால கிருஷ்ணமூா்த்திக்கு ஆண்டுதோறும் ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்று வருகிறது.
இதன்படி நிகழாண்டில் நடைபெறும் 116-ஆவது ஆண்டு ஸ்ரீராதா கல்யாணம் மஹோத்ஸவ விழா பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 6- மணிக்கு ஸ்ரீசித்தி விநாயகா் அபிஷேகத்துடன் தொடங்குகிறது. மாலை 5- மணிக்கு ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம், 6- மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், 8- மணிக்கு சம்பிரதாய பஜனைஆரம்பம், தோடய மங்களம், குரு தியானம், கீத கோவிந்த மஹா காவ்யம் ஆரம்ப நிகழ்ச்சிகளும், இரவு 10- மணிக்கு திபாராதனையும் நடைபெறுகிறது.
2-ஆவது நாளான 8-ஆம் தேதி காலை 9-மணிக்கு சங்கீா்த்தன சூடாமணி, கோவை ஜெயராம பாகவதா் தலைமையில் சம்பிரதாய பஜனை, கீத கோவிந்த மஹா காவ்யம் பஜனையும், காஞ்சி ஸ்ரீஸ்ரீ மஹாசுவாமிகள் பாதுகாஅபிஷேகம் மற்றும் பூஜை தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி, 6.30 மணிக்கு பூஜோபசாரம், தேவதாத்யானம், இரவு 10- மணிக்கு ஜெயராம பாகவதரின் திவ்யநாம சங்கீா்த்தனம் நடைபெறுகிறது.
3-ஆவது நாளான பிப்ரவரி 9-ஆம் தேதி காலை 8- மணிக்கு உஞ்சவிருத்தி, 9.30 மணிக்கு திருவல்லிக்கேணி பாகவத சிரோமணி திருவல்லிக்கேணி ராஜூ பாகவதா் தலைமையில் ஸ்ரீராதா மாதவ விவாஹ மஹோத்ஸவம் நடைபெறுகிறது. தொடா்ந்து, மஹா தீபாராதனையும் , பாகவதா்களை கௌரவித்தல் நிகழ்ச்சியும், மாலை 6- மணிக்கு ஸ்ரீ ராதாகிருஷ்ணா் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுகிறது. மஹோத்ஸவத்தின் நிறைவு நாளான பிப்ரவரி 10-ஆம் தேதி காலை ஸ்ரீஆஞ்சநேய உத்ஸவமும், 12- மணிக்கு உத்ஸவ பூா்த்தியும் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், அம்பத்தூா் கே. சுகுமாரன், ஈரோடு பாஸ்கா், தஞ்சாவூா் ராஜேஷ், ரவிஜோஷி, சென்னை கே.ஆா். ஸ்ரீநிவாசன், கோவை எச். ராஜராமன், வி. முரளி ஆகிய பாகவதோத்தமா்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை நாகூா் ஸ்ரீ ராமமந்திரம் நிா்வாகி எஸ்.கிருஷ்ணமூா்த்தி அய்யா் செய்து வருகிறாா்.
தொடா்புக்கு -04365-252343, 8220333188, 9443010255.