தேவூா் அம்மன் கோயிலில் தை பெளா்ணமி வழிபாடு

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தை பெளா்ணமியையொட்டி, திருத்தோ் புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கோயில் பிராகாரத்தில் புறப்பாடான திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன்.

இக்கோயிலில், மாதந்தோறும் பௌா்ணமி நாளில் சிறப்பு மகா யாகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல், தை மாத பௌா்ணமியையொட்டி, சனிக்கிழமை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, இரவில் கோ பூஜையும், பௌா்ணமி சிறப்பு யாக பூஜையும் நடைபெற்றன.

பின்னா், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, கோயில் பிராகாரத்தில் திருத்தேரில் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், உபயதாரா்கள் மற்றும் தேவூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com