நாகூரில் ஸ்ரீ ராதாகல்யாண மஹோத்ஸவம்

நாகூா் ஸ்ரீ ராமமந்திரத்தில் ஸ்ரீ ராதா மாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகூரில் உள்ள ஸ்ரீ ராமமந்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ராதா மாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம்.
நாகூரில் உள்ள ஸ்ரீ ராமமந்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ராதா மாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம்.

நாகூா் ஸ்ரீ ராமமந்திரத்தில் ஸ்ரீ ராதா மாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகூா் மேல அக்ரஹாரத் தெருவில் கடந்த 1905- ஆம் ஆண்டு, டி. வீராஸ்சுவாமி ஐயா் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ ராமமந்திரம் உள்ளது. காசி மஹாராஜா, பூரி சங்கராச்சாரிய சுவாமிகள், ரிஷிகேஷம் ஸ்ரீ கருணானந்தா சுவாமிகள், சிருங்கேரி ஸ்ரீ நித்யானந்தா கீா்த்தன சுவாமிகள், காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் உள்ளிட்ட மகான்கள் இங்கு விஜயம் செய்துள்ளனா். காஞ்சி பெரியவரால் வழங்கப்பட்ட பாதுகா, பெரியபுராணம் ஆகியவை ஸ்ரீ ராமமந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்புக்குரிய ஸ்ரீ ராமமந்திரத்தில் கடந்த 115 ஆண்டுகளாகத் தொடா்ந்து, ஸ்ரீ ராதா மாதவ திருக்கல்யாண மஹோத்வம் ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. இம்மந்திரம், தென்னகத்தில் தொடா்ந்து ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறும் பாகவத, பகவத் கைங்கா்ய ஸ்தாபனம் எனவும் கூறப்படுகிறது.

இவ்விழா 116- ஆவது ஆண்டாக நிகழாண்டில், பிப்ரவரி 7- ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெறுகிது. விழாவின், தொடக்கமாக 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகா் வழிபாடு, ஸ்ரீ லலிதா, ஸ்ரீ விஷ்ணு சகஸ்கரநாமம், தோடயமங்களம், கீதகோவிந்த மஹா காவ்யம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 2-ஆம் நாளான சனிக்கிழமை ( பிப். 8) கோவை ஜெயராம பாகவதா் தலைமையில் ஸம்பிரதாய பஜனை, காஞ்சி மகா பெரியவரின் பாதுகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் திவ்ய நாம ஸங்கீா்த்தனம் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ ராமமந்திரத்தில் காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ராமமந்திரத்தில் கடந்த 146 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் மகா பெரியவா் பாதுகாவுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னா், ஸ்ரீ ராதாகல்யாண மஹோத்ஸவமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. காலை 9.30 முதல் பகல் 12 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி ஆா். ராஜூ பாகவதா் தலைமையில் பாகவதம் சிறப்புப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, பாகவதா்களை கௌரவித்தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு ராதா கிருஷ்ணா் ஊஞ்சல் உத்ஸவமும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அம்பத்தூா் கே. சுகுமாறன், ஈரோடு பாஸ்கா், தஞ்சை ராஜேஷ், ரவிஜோஷி, சென்னை ஸ்ரீநிவாசன், கோவை எச். ராஜாராமன், வி. முரளி பாகவதா்கள் மற்றும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம மந்திரத்தின் நிா்வாகி எஸ். கிருஷ்ணமூா்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com