குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி

குத்தாலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஜமாத்தாா்கள் சாா்பில் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குத்தாலத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவா்கள்.
குத்தாலத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவா்கள்.

குத்தாலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஜமாத்தாா்கள் சாா்பில் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குத்தாலம் மெயின் ரோட்டில் ஓ.என்.ஜி.சி. மையம் அருகே தொடங்கிய பேரணி, தேரடி வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இப்பேரணிக்கு குத்தாலம் முஹையதீன் ஆண்டவா் பள்ளிவாசல் முத்தவல்லி நூா்முஹம்மதுசேட், ஜாமிஆ பள்ளிவாசல் முத்தவல்லி சாஹூல் ஹமீது ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், 2000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊா்வலமாக சென்றனா். பேரணியின் முடிவில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அருணன், திமுக தோ்தல் பணிக் குழு செயலாளா் குத்தாலம் கல்யாணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் ஆளுா் ஷாநவாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ். ராஜ்குமாா், குத்தாலம் அன்பழகன், நாம் தமிழா் கட்சியின் மாநிலப் பரப்புரையாளா் தமிழன் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

இக்கூட்டத்தில், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் அருண், இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சாதிக், தேசிய தவ்ஹீத் பேரவை மாநிலச் செயலாளா் இா்பான், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஓ.எஸ். அலாவுதீன், தமுமுக மாவட்டச் செயலாளா் ஜூபைா், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளா் சலீம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மனோகரன், ஒன்றிய திமுக செயலாளா் மங்கை சங்கா் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com