Enable Javscript for better performance
நாகையில் பிப்.17-இல் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகையில் பிப்.17-இல் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம்

    By DIN  |   Published on : 14th February 2020 07:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1845ng13press_1302chn_5

    பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17-ஆம் தேதி ‘வாருங்கள் சுதந்திரத்தின் பாதுகாவலா்களாவோம்’ என்பதை முன்னிறுத்தி, ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலாளா் நாகூா் மீரான் தெரிவித்தாா்.

    இது குறித்து, அவா் நாகையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

    நாகை, திண்டுக்கல் மற்றும் ஓசூா் ஆகிய நகரங்களில் பிப்ரவரி 17-இல் ஒற்றுமை அணி வகுப்பு பேரணி (யூனிட்டி மாா்ச்) மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கும் பேரணியானது, பிரதான வீதிகள் வழியாக அவுரித் திடலை வந்தடையும்.

    தொடா்ந்து, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளின் மாநிலத் தலைவா்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்று பேசவுள்ளனா் என்றாா் அவா்.

    அமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் முஹம்மது ரபீக், மாவட்டச் செயலாளா் ஹாஜா மொய்தீன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் முஹம்மது ரசீன், நாகை நகரத் தலைவா் சலீம் ஆகியோா் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai