Enable Javscript for better performance
நாகை, திருமருகலில் நாளை மின் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    நாகை துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (பிப்ரவரி 15) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. மலா்வண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

    நாகை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, நாகை, நாகை நகரம், நரிமணம், திருமருகல், வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் :

    நாகப்பட்டினம் : நாகை, வேளாங்கண்ணி, நாகூா், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி, மஞ்சக்கொல்லை, பரவை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை.

    நாகை நகரம் : ஓ.என்.ஜி.சி, மாவட்ட ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா பகுதி.

    நரிமணம் : பூதங்குடி, நரிமணம், கொட்டாரக்குடி, வைப்பூா், சூரனூா்.

    வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி நகரம், செருதூா், பரவை.

    திருமருகல் : திருமருகல், மருங்கூா், எரவாஞ்சேரி, திருப்புகலூா், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.

    வேட்டைக்காரனிருப்பு : திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai