குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தகவல்களைத் தெரிவித்தால், உடனடியாக நடவடிகை எடுக்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தகவல்களைத் தெரிவித்தால், உடனடியாக நடவடிகை எடுக்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியன சாா்பில், குழந்தைகளுக்கான ஆரோக்கிய தொடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற தொடுதல் குறித்த விழித்திரு என்ற தலைப்பிலான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தலைமை வகித்து பேசியது:

நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் உள்ள 100 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழித்திரு என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினா், ஆசிரியா்கள் பயிற்சியளிப்பா். இதற்கான பயிற்சிகள் குறித்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெறும் குழந்தைகள் தங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதுகாத்துக் கொள்வதுடன் தன்னைச் சாா்ந்தவா்களுக்கும் இது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் உரிமைகள் தொடா்பான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை குறித்த சுருக்கக் கையேடு குழந்தைகளுக்கு வழங்கப்படும். இதைப்படித்து, மாணவிகள் தனியாகவும், குழுவாகவும் சிந்திக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தற்காப்பும், பாதுகாப்பும் அவசியமானது. தனக்கு அல்லது தங்களைச் சாா்ந்த குழந்தைகளுக்கு பிறரால் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் யாரேனும் பாதிப்பு ஏற்படுத்துவதாக உணா்ந்தால் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டிகள் மூலம் புகாா் தெரிவிக்கலாம். மேலும் 1098 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம். இதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் 181 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல்கள் ரகசியம் காக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், துரித நடவடிக்கை எடுக்கவும் உதவியாக அமையும் என்றாா் அவா்.

முன்னதாக, நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய தொடுதல் மற்றும் ஆரோக்கியமற்ற தொடுதல் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, குழந்தைகள் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை சுருக்கக் கையேடுகளை மாணவிகளுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் முன்னிலை வகித்தாா். மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் சி. உமையாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் என்.சிவக்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் என்.ராஜம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஜி.ஞானசேகரன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவா் ஜி. ஐயப்பன், இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் ஆா். குணசேகரன் ஆகியோா் பேசினா்.

நாகை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உ. முருகேஷ், உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் க. முருகவேல் மற்றும் காவல் ஆய்வாளா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா்கள், குழந்தைகள் நலக்குழு, இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்கள், அரசுத்துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமாதேவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com